ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Photo Credit: Realme
இந்தியாவில் அறிமுகமான Realme P4 Power 5G: 10001mAh பேட்டரி, 80W சார்ஜிங், 50MP கேமரா
"போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்குது, எப்பப்பாரு பவர் பேங்க்கை கையிலேயே தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு"னு பீல் பண்ற ஆளா நீங்க? அப்போ ரியல்மி உங்களுக்காகவே ஒரு 'அசுரனை' லான்ச் பண்ணிருக்காங்க. அதுதான் Realme P4 Power 5G. இன்னைக்கு இந்த போனோட விலை, இதுல இருக்குற மொரட்டுத்தனமான சிறப்பம்சங்கள் எல்லாத்தையும் பத்தி விலாவாரியா பாக்கலாம். இந்த போனோட ஹைலைட்டே இதோட 10,001mAh Titan Battery தான். ஆமாங்க, நீங்க தப்பா படிக்கல, இது உண்மையிலேயே பத்தாயிரத்து ஒன்று எம்.ஏ.ஹெச் பேட்டரி! இந்தியாவிலேயே இந்த அளவுக்கு ஒரு பெரிய பேட்டரியோட வர்ற முதல் மெயின்ஸ்ட்ரீம் போன் இதுதான். ஒருமுறை ஃபுல் சார்ஜ் பண்ணிட்டா, சாதாரணமா யூஸ் பண்றவங்களுக்கு 3-4 நாள் வரைக்கும் தாராளமா வரும்னு ரியல்மி சொல்றாங்க.
இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தா சார்ஜ் ஏற ஒரு நாள் ஆகுமேனு நினைக்காதீங்க. இதுல 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் இருக்கு. வெறும் 36 நிமிஷத்துல 50% சார்ஜ் ஏறிடுமாம். அதுமட்டும் இல்லாம, 27W Reverse Charging வசதி இருக்கு. அதாவது, உங்க பிரண்டோட போன்ல சார்ஜ் இல்லைனா, உங்க போனை பவர் பேங்கா மாத்தி அவங்களுக்கு சார்ஜ் கொடுக்கலாம். செம கெத்துல.
டிஸ்ப்ளே பக்கமும் ரியல்மி கை வைக்கல. 6.8-inch 1.5K 4D Curve+ HyperGlow AMOLED டிஸ்ப்ளே கொடுத்திருக்காங்க. 144Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்குறதுனால ஸ்க்ரோலிங் ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். வெயில்ல போன் பார்த்தா ஸ்க்ரீன் தெரியாதுங்கிற கவலையே வேண்டாம், ஏன்னா இதுல 6,500 nits பீக் பிரைட்னஸ் இருக்கு. இந்த விலையில இவ்வளவு பிரைட்னஸ் இருக்குறது உண்மையிலேயே ஆச்சரியம் தான். போன் பாக்குறதுக்கு ரொம்ப பிரீமியமா இருக்குறது மட்டும் இல்லாம, IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் இருக்கு. அதாவது தண்ணிக்குள்ள போட்டாலும் சரி, தூசியில போட்டாலும் சரி, இந்த போனுக்கு ஒன்னும் ஆகாது.
இதுல MediaTek Dimensity 7400 Ultra சிப்செட் இருக்கு. இதோட ஒரு ஸ்பெஷலான HyperVision+ AI சிப்-யும் சேர்த்திருக்காங்க. கேமிங் விளையாடும்போது லேக் ஆகாம இருக்கவும், கிராபிக்ஸ் சூப்பரா தெரியவும் இது உதவும். BGMI போன்ற கேம்களை 90fps-ல அசால்ட்டா விளையாடலாம். சூடாகாம இருக்க ஒரு பெரிய 'AirFlow' வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் இதுல இருக்கு.
போட்டோ எடுக்குறதுக்கு பின்னாடி 50MP Sony IMX882 மெயின் கேமரா இருக்கு. இதுல OIS (Optical Image Stabilization) வசதி இருக்குறதுனால, காய் நடுங்கினாலும் வீடியோ ஷேக் ஆகாம வரும். இதோட ஒரு 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் இருக்கு. செல்ஃபி எடுக்க 16MP கேமரா கொடுத்திருக்காங்க. பகல் நேரத்துல எடுக்குற போட்டோஸ் எல்லாம் செம ஷார்ப்பா, கலர்ஃபுல்லா இருக்கு.
இந்த போன் மூணு வேரியண்ட்ல வருது:
● 8GB + 128GB: ரூ. 25,999
● 8GB + 256GB: ரூ. 27,999
● 12GB + 256GB: ரூ. 30,999
ஆனா ஒரு சின்ன ட்ரிக் இருக்கு! ஆரம்ப கால ஆஃபரா பேங்க் டிஸ்கவுண்ட் எல்லாம் சேர்த்தா, பேஸ் மாடலை நீங்க ரூ. 23,999-க்கே தூக்கிடலாம். பிப்ரவரி 5-ம் தேதியில இருந்து பிளிப்கார்ட்ல விற்பனை தொடங்கப்போகுது.
நம்ம ஊரு தீர்ப்பு: உங்களுக்கு பேட்டரி தான் முக்கியம், அதேசமயம் கேமிங் மற்றும் கேமராவும் நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்த Realme P4 Power 5G ஒரு சூப்பர் சாய்ஸ். கொஞ்சம் வெயிட் (219g) அதிகமா இருந்தாலும், அந்த ராட்சத பேட்டரிக்கு அது நியாயம் தான். இந்த 'பவர் பேங்க்' போனை வாங்க நீங்க ரெடியா? உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
പരസ്യം
പരസ്യം